முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளமக்களின் பண்டிகையான ஓணம்பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில், ஆக.- 29 - கேரள மக்களின் தித்திப்பான திருவோணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. திருவேணம் பண்டிகை ஜாதி, மத பேதம் இன்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலம் இடுவார்கள். ஓணம் பண்டிகை 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். தங்கள் வீடுகளில் அறுசுவை உணவுகளை சமைப்பார்கள். படகு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் ஓணம் தொடங்கி விட்டாலே அங்கே கேரள பூ வியாபாரிகளின் படையெடுப்புகள் பலமாக இருக்கும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் வண்ண வண்ண பூக்கள் குவியல் குவியலாக குவிந்து கிடக்கின்றன. அதை அனைவரும் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றனர். இதைபோல காய்கறி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காற்கறி பழங்களை வாங்கி சென்றனர். ஒரு வாழை இலை ரூ.5 முதல் 10 வரை விற்பனை செய்யப்பட்டது.
சந்தைகளில் வழக்கத்கை விட காற்கறிகள், பழங்கள் விலை அதிகமாக காணப்பட்டாலும் மக்கள் திருஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவாற்காக அவற்றை வாங்கி சென்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகைள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
படவிளக்கம்:- நாகர்கோவில் பார்வதிபுரத்தில் அமைந்துள்ள மெட்ரைட் ஹெல்த்கேர் செல்யுசைன்ஸ் நிறுவனத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்ட அத்தபூ கோலம் மற்றும் அதை அமைத்த ஊழியர்களை படத்தில் காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்