முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்இறந்த பின்தான் நித்தியானந்தா மடாதிபதியாக முடியும்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 29 - எனது காலத்திற்குப்பின் தான் நித்தியானந்தா ஆதினப் பட்டத்திற்கு வர முடியும் என்று மதுரை ஆதினம் அருணகிரி நாதர் கூறியுள்ளார். மதுரை ஆதீனம் அருணகிரி  நாதர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்று முன்தினம் இரவு 10.50 மணிக்கு தனியார் விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், உடல் பரிசோதனைக்காக சென்னை மருத்துவமனைக்கு தாம் வந்ததாக கூறினார்  . மதுரை ஆதீனத்தில் புதிதாக நித்தியானந்தரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, தம்முடைய காலத்திற்கு பிறகுதான் அவர் ஆதீன பொறுப்புக்கு வர முடியும் என்றும், இதில் எந்தவித பிரச்சினையும் இல்லையென்றும் தெரிவித்தார்.எனக்கு சுவாச பிரச்சினை உள்ளதால் மருத்துவமனையில் பரிசோதனைக்கு செல்கிறேன். டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெறுவேன். மதுரை ஆதீனத்தின் சன்னிதானமாக அருணகிரி நாதர் சுவாமிகள் இருப்பதால் அந்த மடத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். இது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி நேர்மையான முறையில் தக்க முடிவு என தெளிவுப்படுத்தி உள்ளது. மதுரை ஆதீனத்தை பொறுத்தவரை தமிழ்மொழி வளர்ச்சியையும், சைவ நெறிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். மதுரை ஆதீன மடத்தை தலைமை ஆதீனமாக நான் இருந்து வழி நடத்தி வருகிறேன். எனது காலத்திற்கு பிறகுதான் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டவர் (நித்யானந்தா) பட்டத்துக்கு வரமுடியும். இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா அவருக்கு உரிய பணியை செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.  மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஒரு சில நாட்களாக நித்தியானந்தருடன் கொடைக்கானலில் தங்கியிருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதை தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காகவே சென்னை மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்