முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையை எலிகடித்த சம்பவம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 29 - குழந்தையை எலி கடித்த சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த நேதாஜி போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி சடையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் தெரிவித்துள்ளதாவது:- சென்னை திருவல்லிகேணியில்  உள்ள கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை எலி கடித்து இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. சம்பவம் நடந்த போது பணியில் இருந்த டாக்டர்களும் நர்சுகளும் தான் இதற்கு பொறுப்பெற்க வேண்டும். அவர்களது கவனக்குறைவினால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க. மருத்துவமனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர்கள், நர்சுகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவனைகளை சுத்தமாக வைத்திருக்கவும், மருத்துவமனைகளில் எலி, பூனை, நாய் தொல்லைகளை கட்டுபடுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு சடையன் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் முன்பு ஆஜராகி, வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் கோரிக்கை வைத்தார். இதை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டு இந்த அவசர வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago