முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின்பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல்தொகை: கலெக்டர் வழங்கினார்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 29 - 2010-11ம் ஆண்டில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் இணைந்து ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கிய மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள 926 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வழங்கிய பாலுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட லிட்டர் ஒன்றிற்கு 0.50 பைசா வீதம் கூடுதல் விலையினை நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்சுல்மிஸ்ரா வழங்கினார்.மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சராசரியாக நாள் ஒன்றிற்கு 2,10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து சராசரியாக நாள் ஒன்றிற்கு 1,60,000 லிட்டர் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் இணைந்து ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கிய மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள 926 பால் உற்பத்தியாளர்; கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட பாலுக்கு லிட்டர் ஒன்றிற்கு 0.50 பைசா வீதம் கூடுதல் விலையாக மொத்தம் ரூ.2,41,44,418.50 வழங்குவதற்கு சிறப்பு ஆணைகள் அரசின் மூலமாக வழங்கப்பட்டு இன்றைய தேதியில் சங்கங்களின் மூலமாக பால் ஊற்றிய உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அன்சுல்மிஸ்ரா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் தமிழ்ச்செல்வி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
--

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்