முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் கொலை: முரணான தகவலை தரும் அமெரிக்கா

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்,ஆக. - 30 - தனது படுக்கை அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப் பார்த்த போதுதான் ஒசாமா பின்லேடனை சுட்டோம் என்று அவரைக் கொன்ற அமெரிக்க சீல் படையைச் சேர்ந்த வீரர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். முன்னதாக ஒசாமா பின் லேடனைத் தேடிக் கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தபோது அவர் துப்பாக்கியை எடுக்க முயன்றதாகவும், இதையடுத்தே அவரை சுட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால், இந்தத் தாக்குதலை நடத்திய சீல் படையின் வீரர்களில் ஒருவரான மெட் பிஸோனெட் எழுதியுள்ள புத்தகம் ஒன்று அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்தப் புத்தகத்தை அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் நேற்று பெற்றுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒசாமா பின் லேடன் தனது அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப் பார்த்தார். இதையடுத்து அவரை உடனே தலையில் சுட்டோம் என்று பிஸோனெட் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒசாமா கொல்லப்பட்ட விதம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அரசு வெளியிட்ட முந்தைய தகவலின்படி, ஒசாமா துப்பாக்கியை எடுக்க முனைந்தபோது தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் ஒசாமா சரணடைந்தால் அவரை உயிரோடு பிடிக்குமாறு தங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் பிஸோனெட் எழுதியுள்ளார். ஒசாமா சுடப்பட்ட விதம் குறித்து எழுந்துள்ள இருவேறு கருத்துக்கள் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டாமி வெடோர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்