முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர்,மே.- 30 -  விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்; டி.என்.ஹரிஹரன் பார்வையிட்;டு ஆய்வு செய்தார்கள். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லி ஊராட்சியில் உள்ளுர்பட்டி கிராமத்தில் 520 மீட்டர் நீளத்திற்கு மயான கூடத்திற்கு செல்லும் புதிய சாலை ரூ.9லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். முள்ளிக்குளம் ஊராட்சியில் ரூ.39,846டி- செலவில் சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையினை தரமாக அமைத்திடவும், சுகாதார வளாகத்தினை சுகாதாரமான முறையில் பராமரித்திடவும் மாவட்ட கலெக்டர்; அலுவலர்களை அறிவுறுத்தினார். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக முதல்வர்; சிறப்புத் திட்டமான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 2011-12ம் நிதியாண்டின் ஒதுக்கீட்டின் கீழ் 164 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 111 வீடுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் முடியும் தருவாயில் உள்ளன. வீடுகள்அனைத்தும் விரைவாக முடித்திட மாவட்ட கலெக்டர்; உத்தரவிட்டார். இவ்வுரைாட்சி  ஒன்றியத்தில் முள்ளிக்குளம் கிராமத்திலும், இனாம்நாச்சியார்கோவில் ஊராட்சி, நக்கமங்களம் கிராமம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இவ்வீடுகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என பார்வையிட்டார்கள். பசுமை வீடுகள் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் கண்டிப்பாக கழிப்பறைகள் அமைத்திடவும், அதற்கு அரசு வழங்கும் மான்யத்தினை வழங்கிடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து முள்ளிக்குளம் கண்மாய் - உசிலம்பட்டி கண்மாய் நீர்வரத்துக் கால்வாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டார். அங்கு பணி செய்யும் பணியாளர்களின் அடையாள அட்டைகள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட கலெக்டர்; ஆய்வு செய்தார்கள். மேலும் தாய் திட்டத்தின் கீழ் ரூ.4.25 லட்சத்தில் அத்திகுளம்-செங்குளம் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டார்கள். இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 148 வீடுகள் கட்ட 2011-12ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டு 98 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளது. 50 வீடுகள் முடியும் தருவாயில் உள்ளது. இவ்வீடுகளை விரைவாக கட்டி முடித்திட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சோழபுரம் ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட பசுமை வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து மவுண்ட் சியோன் வரத்துக் கால்வாய்  ரூ.5லட்சம் செலவில் ஆழப்படுத்தும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 11 ஆண்களும் 113 பெண்களும் பணியில் ்டுபட்டு இருந்தனர். பணியாளர்களின் பதிவேடுகளை பார்வையிட்டு வருகை பதிலேவடு சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்கள். பணிக்கு வராதவர்கள் பெயருக்கு நேராக வரவில்லை என தகவல் குறித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தென்காசி-திருமங்கலம் சாலையிலிருந்து இராஜபாளையம் சோழாபுரம் செல்லும் மாவட்ட முக்கிய சாலையில் 9.6கி.மீ நீளத்திற்கு ரூ.292.6லட்சம் செலவில் நெடுஞ்சாலைத்துறையினரால் மேம்படுத்தப்பட்டுள்ள சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். சாலையின் இரு ஓரங்களிலும் மழை நீரினால் அரிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். ஆய்வின் போது திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் காளிமுத்து, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் முனீஸ்வரன், உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் ராதாமுத்துகுமாரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சுப்பாராமன் (திருவில்லிபுத்தூர்), நாகஜோதி (இராஜபாளையம்), உதவிப்பொறியாளர் ராஜரத்தினம்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரியப்பன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்