முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓணம்பண்டிகை:மலையாளிகள் கோலாகல கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 30 - மலையாள மக்களின் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று சென்னையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கிய ஓணம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், nullராடம், உத்திராடம் என ஒவ்வொரு நாளும் கோலாகலமாக நடந்தது. விழா நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ண, வண்ண மலர்களால் அத்தப்null கோலமிட்டு மகிழ்ந்தனர். விழாவின் சிறப்பாய், திருவோண நட்சத்திரமான நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம் முழுவதும் சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடைகள் உடுத்தி அத்தப்null கோலமிட்டு தங்களை காண வருகை தரும் மாபலி மன்னரை வரவேற்றனர். கேரள மாநிலம் மட்டும் அல்லாமல், தமிழகத்திலும் கேரள மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. வீட்டு வாயில்களில் அத்தப்null கோலமிட்டு, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் செய்து அதனை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அளித்து கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது, வித்தியாசமின்றி ஓணம் ஊஞ்சலாடி சந்தோஷப்பட்டனர். , அறுசுவை விருந்துடனும் இறைவனை வழிபட்டு , திருவாதிரைக்களி நடன மாடியும் மகிழ்ந்தனர். ஓணத்தையொட்டி குமரி ,சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்