முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுடன் சி.பி.ஐ. பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்

 

சென்னை, பிப். 21-​சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இடங்களை பகிர்ந்து கொள்வது குறித்து அ.தி.மு.க.வுடன் சி.பி.ஐ.(இந்திய கம்யூனிஸ்டு) நிர்வாகிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவினரோடு பேசி வருகிறார்கள். இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலி, ஜவாஹிருல்லா ஆகியோர்  நேற்று முன்தினம் அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அ.தி.மு.க. தரப்பில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் தா. பாண்டியன், துணை செயலாளர் மகேந்திரன், கோ.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 10.30 மணி முதல் 11.50 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சு வார்த்தை முடிந்ததும் தா. பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:​ 

வரப்போகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க அணிகள் அமைக்கவும், திட்டமிடவும் தொடர்ந்து பேசி வருகிறோம். இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு ஏற்பட்டு விடும். இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு அ.தி.மு.க. தலைமையிடம்தான் உள்ளது. அதற்கான முயற்சிகளில் அவர்களும் ஈடுபட்டுள்ளார்கள். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் வகையில், மகிழ்ச்சி அடையும் வகையில் எங்கள் வெற்றிப்பயணம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்