முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நியூசிலாந்து 2-வது டெஸ்ட் இன்று துவக்கம்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஆக. 31- இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று துவங்க இருக்கிறது. முன்னதாக கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை ஒயிட் வாஷ் ஆக்க இந்திய அணி முனைப்புடன் களம் இறங் குகிறது. 

ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணியி ன் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி நியூசி.யின் விக்கெட்டை வீழ்த் தி அணியை வெற்றி பெற வைத்தனர். 

அந்தப் போட்டியில் அஸ்வின் 12 விக்கெட்டையும், இடது கை சுழற் பந்து வீச் சாளரான பிரக்ஞான் ஓஜா 6 விக்கெட்டையும் வீழ்த்தினர். மொத்தம் 20 விக்கெட்டில் 18 விக்கெட்டை இவர்கள் இரு வரும் கைப்பற்றினர். 

எனவே நியூசி.க்கு எதிரான தொடரை கைப்பற்ற இந்திய அணி மீண்டும் சுழற் பந்து வீச்சாளர்களையே நம்பி உள்ளது. கடந்த போட்டியில் உதவியது போல பருவச் சூழ்நிலையும் இதற்கு உதவவே ண்டும். 

டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத் தி வந்த மூத்த வீரர்களான ராகுல் டிரா விட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றதால் அந்த இடம் காலியாகவே இருக்கிறது. 

அவர்கள் இல்லாத குறையை தேஜேஸ் வர் புஜாராவும், விராட் கோக்லியும் நிறைவேற்றி வருகின்றனர். கடந்த டெஸ்டில் இருவரும் நன்கு பேட்டிங் செய்தனர். 

ஐதராபாத் டெஸ்டில் புஜாரா தனது கன்னி சதத்தை (159)அடித்தார். அவருக் குப் பக்கபலமாக ஆடிய கோக்லி அரை சதம் அடித்தது நினைவு கூறத்த க்கது.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங் சில் பிரமமாண்ட ஸ்கோரை எட்டியது. முடிவில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணிக்கு நல்ல தன்னம்பிக்கைய அளித்துள்ளது. 

இதற்கு முன்பு நடைபெற்ற வெளிநாட்டுத் தொடரில் இந்திய அணி இங்கிலா ந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிட ம் 0 - 4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. 

அந்தப் பயணம் இந்திய அணிக்கு கசப் பான உணர்வை அளித்தது. எனவே அத னை மறக்கும் வகையில் இந்த உள்நாட்டுத் தொடர் அமைந்துள்ளது. 

நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டில் துவக்க வீரரான சேவாக்கும் நன்கு ஆடி னார். அவர் 47 ரன் எடுத்தது குறிப்பிடத் தக்கது. தவிர,கேப்டன் தோனியும் பக்க பலமாக ஆடினார். 

கடந்த வார டெஸ்டில் கோட்டை விட்ட டெண்டுல்கர் இந்த டெஸ்டில் ரன் னை எடுக்க தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறார். சேவாக்கும் இதில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்தியாவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பெளலிங் ஆகிய இரண்டிலும் மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. 

எனவே அந்த அணி இந்த டெஸ்டில் இந்திய அணியின் ஸ்பின்னர்களை சமாளி ப்பதற்காக வளைப் பயிற்சி எடுத்து வருகிறது. தோல்வியை தடுக்க புதிய வியூகம் அமைத்து வருகின்றனர். 

கடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி தரப்பில், வில்லியம்சன் மற்றும் மெக் குல்லம் இருவரும் சிறிது தாக்குப் பிடி த்து ஆடினர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். 

கடந்த இரண்டு தொடர்களில் கேப்டன் ரோஸ் டெய்லர் சரியாக ஆடவில்லை. எனவே அவர் இந்த டெஸ்டில் எப்படி ஆடினால் சமாளிக்கலாம் என்பது குறி த்து ஆலோசித்து வருகிறார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வதுடெஸ்ட் பெங்களூரில் உள்ள சின்னசாமி அரங்கத் தில் இன்று காலை 9.30 மணிக்கு துவங் குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்