முக்கிய செய்திகள்

திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல்

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      இந்தியா
Trinamool-Congress logo 1

பர்தாமன்,ஏப்.- 6 - மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் நேபால் சந்திரா கோராய் தாக்கப்பட்டார். இவரை இடது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ரெய்னா சட்டமன்ற தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேபால் சந்திரா கோராய் போட்டியிடுகிறார். இவர் தனக்கு ஆதரவு தேடி பர்த்வான் மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்து கொண்டியிருந்தார். அப்போது அவரை பலர் தாக்கினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து வேட்பாளர் நேபால் சந்திரா கோராய் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் கோராய் புகார் கொடுத்துள்ளார். அதில் ஹரிபாதா சந்த்ரா தலைமையில் இடது கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தம்மை தாக்கினர் என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து மாதவ்திஹி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: