முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் நெல்லையில் நல்லகண்ணு பேட்டி

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை ஏப்-6- வருகிற தேர்தலில்அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூட்டணி ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லையென்றும் அவர் நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் தரிவித்ததாவது:  தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகமெங்கும் தி.மு.க. ஆட்சி அகற்றப்படவேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள், மணல்கொள்ளை, மின்வெட்டு, நிர்வாக சீர்கேடு போன்றவை மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை கண்டு கருணாநிதி பயப்படுகிறார். தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். தேர்தல்வரை இதேபோன்ற நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தீவிரபடுத்தவேண்டும். மக்கள் அதிகார பலத்தை கண்டு பயப்படாமல் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். திருமங்கலம் பார்முலாவை இந்த தேர்தலில் முழுமையாக பயன்படுத்தமுடியாத ஆத்திரத்தில் முதல்வர் மின் எமர்ஜென்சி அமலில் இருப்பதாக கூறுவது அவரது இயலாமையை காட்டுகிறது. தேர்தல் விதிமுறைகள் மீறல் மதுரையை மையமாக வைத்தே நடைபெறுகிறது. கலெக்டர் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை.  அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் அத்துமீறல் நடக்கிறது.வருகிற 13ம்தேதி வரை தேர்தல் கமிஷனின் நேர்மையான நடவடிக்கைகள் தொடரவேண்டும். தேர்தலில் அ.தி.மு.க. தன் மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்