முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நிதின் கட்காரி நாளை தமிழகத்தில் பிரச்சாரம்

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை. ஏப்.- 6 - பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி நாளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு படையெடுக்கிறார்கள். அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி 7​ந் தேதி(நாளை) மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார். நடிகை ஹேமமாலினி  இன்று (6​ந் தேதி) முதல் 2 நாட்கள் சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். நடிகை பிரித்விராணியும் 8​ந் தேதி சென்னையில் பிரசாரம் செய்கிறார். 

எல்.கே. அத்வானி 10​ந் தேதி தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் மதுரை, சென்னையில் பேசுகிறார். குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடி 10​ந் தேதி தளி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்