முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்டென்னிஸ்: ரோஜர்பெடரர், செரீனா வில்லியம்ஸ் 3 -வது சுற்றுக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், செப். - 1 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் ரோஜர் பெடரர், ஆன்டி ரோடி க் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகி யோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரான நியூயா ர்க்கில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இரு க்கிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர் கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2- வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் சுவிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரரும், ஜெர்மனி வீரரும் மோதினர். இதில் உலக நம்பர் - 1 வீரரான பெடரர் சிறப்பாக ஆடி 6 -2, 6 -3, 6 - 2 என்ற செ ட் கணக்கில், ஜோர்ன் பாவுலை தோற் கடித்து 3 -வது சுற்றுக்குள் நுழைந்தார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 2- வ து சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்சு ம், ஸ்பெயின் வீராங்கனையும் மோதி னார்கள். இதில் செரீனா அபாரமாக ஆடி, 6 -2, 6 -4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயி ன் வீராங்கனை மார்ட்டினா சான்செ சை வீழ்த்தி 3 -வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வ து சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஆன்டி முர்ரே வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற் றில் சானியா மிர்சா மற்றும் காலின் பிளமிங் ஜோடி வெற்றி பெற்றது. ஆடவ ர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் லியாண்டர் பயஸ் மற்றும் ரேடக் ஸ்டீ பானிக் ஜோடி வெற்றி பெற்றது. ஆனால் மகேஷ் பூபதி மற்றும் பொப ண்ணா ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளி யேறியது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago