முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ.வுக்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி அபாரவெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், செப். - 2 - தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லண்டனில் நடந்த 3 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இந்த வெற் றியால் இங்கிலாந்து அணி மீண்டும் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், டிராட் மற்றும் மார்கன் இருவரும் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக, கேப்டன் குக் மற்றும் கீஸ்வெட்டர் ஆகியோர் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, முன் னணி வேகப் பந்து வீச்சாளர்களான ஆண்டர்சன் மற்றும் டெர்ன்பேட்ச் இரு வரும் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டை வீழ்த்தி தெ.ஆ.வின் ரன் குவிப்பை கட்டுப் படுத்தினர். அவர்களுக்கு பக்க பலமாக, டிரட்வெல் மற்றும் பொபா ரா ஆகியோர் பந்து வீசினர். தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டிவில்லியர்ஸ் தலைமையில் இங்கிலா ந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் அலிஸ்டார் குக் தலைமையி லான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக் கா அணிகளுக்கு இடையேயான 3 -வது ஒரு நாள் போட்டி லண்டன் அருகே உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத் தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந் தது. முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற தெ. ஆ. அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி இறுதியில் 46.4 ஓவ ரில் அனைத்து விக்கெட்டையும் இழந் து 211 ரன்னில் சுருண்டது. தெ. ஆ. அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. அம் லா அதிகபட்சமாக, 51 பந்தில் 43 ரன் எடுத்தார். எல்கர் 61 பந்தில் 42 ரன் எடு த்தார். தவிர, டுமினி 33 ரன்னையும், கேப்டன் டிவில்லியர்ஸ் 28 ரன்னையும், பீட்டர்சன் 23 ரன்னையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 44 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடு த்தார். டெர்ன்பேச் 44 ரன்னைக் கொடு த்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, டிரட் வெல் 2 விக்கெட்டும், பொபாரா 1 விக்கெட்டும் எடுத்தனர். இங்கிலாந்து அணி 212 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை தென் ஆப்பிரிக்கா வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன் னை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி இந்த 3- வ து போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகி யுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில், மார்கன் அதிகபட்சமாக, 67 பந்தில் 73 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். டிராட் 125 பந்தில் 71 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி அடக் கம். தவிர, கேப்டன் குக் 20 ரன்னையு ம், கீஸ்வெட்டர் 14 ரன்னையும், பெல் 12 ரன்னையும் எடுத்தனர். தெ. ஆ. அணி சார்பில் பீட்டர்சன் 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, ஸ்டெயின், மார்கெல் மற் றும் பர்னெல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மார்கன் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்