முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமடி வடிவேலுவின் ஆபாச பேச்சு பொதுமக்கள் முகம் சுளிப்பு - கல்வீச்சு

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

மதுரை, ஏப். - 6 - நடிகர் வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரத்தில் அவரது ஆபாச பேச்சைக் கேட்டு பொதுமக்கள் முகம் சுளிப்பதோடு ஆத்திரமடைந்து கல்வீச்சும் நடத்திவருகிறார்கள். 

தேர்தல் அறிவிக்கப்பட்டதுவரை தி.மு.க. என்ற கட்சியோ, அ.தி.மு.க. என்ற கட்சியோ இருப்பதாக கூட தெரியாத நடிகர் வடிவேலு, திடீரென விஜயகாந்த்துடன் இருந்த முன்விரோதத்தில் அவரை வசைபாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க.வில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் வடிவேலு, மேடைப்பேச்சு நாகரீகம் என்றால் என்னவென்றுகூட தெரியாமல் அநாகரீகமாக பேசிவருகிறார். நான்கு சுவற்றுக்குள் பேசவேண்டிய விஷயங்களை மக்கள் முன்னிலையில் பேசி ஆத்திரமடைய செய்வதோடு, அவமானப்பட்டும் திரும்புகிறார். 

கடந்த சில நாட்களாக மதுரையில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக கூறி, தி.மு.க.வைப் பற்றியோ, வேட்பாளர்கள் பற்றியோ எதுவுமே பேசாமல், விஜயகாந்த்தை வசைபாடுவதையே முழுமூச்சாக செய்துவருகிறார். மதுரையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் இவரது பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வடிவேலை பார்ப்போம் என்று வரும் பெண்கள், இவர் பேச ஆரம்பித்ததும் முகத்தை சுளித்தபடி கலைந்து செல்ல துவங்கிவிடுகின்றனர். இதில் உச்சகட்டமாக மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் வடிவேலுவின் ஆபாச பேச்சைக் கேட்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து கல்வீசி தாக்கினர். இதனால் தொடர்ந்து பேசமுடியாமல் வடிவேலு திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. வடிவேலுவின் காமெடி என்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரசித்த நிலை மாறி, தற்போதைய அவரின் அரசியல் பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களிடமும் வெறுப்பையும், எதிர்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலி அவரது பிரச்சாரத்தின்போது மக்கள் நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும்போதே தெரியவருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago