முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அலை வீச தொடங்கிவிட்டது டாக்டர் சேதுராமன் பேச்சு

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 6 - தமிழ் நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அலை வீச துவங்கிவிட்டது என்று டாக்டர் சேதுராமன் கூறினார்.  ஏழைமக்களுக்கு இலவச ஆடு தருவோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தது ஒரு தொலைநோக்குத் திட்டம் நான்கு ஆடுகளை முறையாகப் பராமரித்தால் கால்நடை இனப்பெருக்கம் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் காப்பாற்றப்படும். ஆடுகள் வளர்க்கும் குடும்பத்துக்கு வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானமும் வரும் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது உரையாற்றினார். திருச்சுழி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அ.இ.மூ.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் ச.இசக்கிமுத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வக்கனாங்குண்டு, தோணுகால், கல்குறிச்சி, முடியனூர், மல்லாங்கிணறு, வரலொட்டி, வலுக்கலொட்டி, ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்த டாக்டர் சேதுராமன் பேசும் போது சிமெண்ட் தொழிற்சாலைகளில் பங்குதாரான கருணாநிதி குடும்பம் தங்களுக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக சிமெண்ட் விலையை கூட்டினார்கள். 1600 ரூபாய்க்கு விற்ற மணல் லோடு 14,000 ரூபாய் ஆகிவிட்டது.  அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிறுத்தும் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் சில சுயேச்சைகளுக்கு முரசு சின்னம் ஒதுக்கி சதி செய்கிறார்கள். ஒரு பக்கம் பணம் விளையாடுகிறது. இன்னொருபக்கம் அதிகாரிகள் விளையாடுகிறார்கள். ஆனால் எந்த தகிடுதத்தம் செய்தாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவான அலை... சுனாமி அலையாக மாறிவிட்டது. கருணாநிதியின் அராஜக ஆட்சிக்கு எதிராக மக்களின் சுனாமி அலை இருக்கும் என்று குறிப்பிட்டார். டாக்டர் சேதுராமன் பிரச்சாரத்தின் போது காரியாபட்டி ஒன்றிய செயலாளர் ராஜராஜன், தே.மு.தி.க. ஒன்றியச் செயலாளர் வடுகன், அருப்புக்கோட்டை  முருகன், புதிய தமிழகம்  ஒன்றியச் செயலாளர் சேகர், சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis