முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கோ நாட்டில் ஐ.நா.சபை விமானம் தரையில் மோதி 32 பேர் பலி

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

கின்ஷாசா,ஏப்.- 6 - காங்கோ நாட்டில் ஐ.நா.சபை விமானம் தரையில் மோதி 32 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தொடர்ந்து கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, ஐ.நா. சபை அங்கு அமைதிபடையை அனுப்பியுள்ளது. அதில் 19 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் கலவரக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றி வருகின்றனர்.

 இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஐ.நா.சபையின் அமைதிப்படை வீரர்கள், ஊழியர்கள் உள்பட 33 பேர் ஒரு விமானத்தில் கிசன்கனியில் இருந்து கின்ஷாசா நகருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விமானம் கின்ஷானா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இதனால் விமானம் வெடித்து சிதறியது. இச் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த அமைதிப்படை வீரர்கள் மற்றும் விமானஊழியர்கள் உள்பட 32 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயத்துடன் உயர் தப்பினார். அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனார். இந்த விபத்துக்கு மாறுபட்ட தட்பவெப்பநிலையும் மற்றும் அதிக அளவில் காற்று வீசியதும் தான் காரணம் என கூறப்படுகிறது. இந்த தகவலை ஐ.நா.சபையின் அமைதிப்படை தலைமை அதிகாரி ஆலியன் வீராய் தெரிவித்துள்ளார். இதற்கிடையே,  விமான விபத்தில் பலியானவீரர்களின் குடும்பத்துக்கு ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago