முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி கோவிலில் தங்க தகடுகள் பதிக்கும் பணி

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி,செப்.4 - ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ராஜகோபுர விமானத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் பணியினை ஆந்திர மாநிலம் திருப்பதி பெரிய ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கி துவக்கி வைத்தார். விழாவில் முக்கிய பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டனர். 

ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் சன்னிதி ராஜகோபுரத்தினை தங்க விமானம் ஆக்கும்பணி கோவில் தக்கார் ரவிச்சந்திரன், மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் துவங்கி அதற்கான முதல்கட்ட பணிகளான விமானத்திற்கு காப்பர் பிளேட் அமைக்கும்பணி நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து விமானத்திற்கு தங்க தகடுகள் பூசும் பணி நேற்று(3ந்தேதி) துவங்கியது. 

இதற்கென ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோபராமானுஜ ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமிகள் நேற்று ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலுக்கு வருகைதந்தார்.

அவருக்கு கோவில் தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜீயர் சுவாமிகள் ஆண்டாள் கோவில் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கோவில் அர்ச்சகர் ரகுராமபட்டர், அனந்த சயன பட்டர்,ரமேஸ்பட்டர், கிச்சப்பன் ஆகியோர் பூஜைகள் செய்தனர். இதனை தொடர்ந்து கோவில் கோபுரத்தில் உள்ள வரஹர் சிலைக்கு ஜீயர் சுவாமிகள் தங்க தகடு பூசி திருபணிகளை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ராம்கோ சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா கோவில் தக்கார் ரவிசந்திரன் மற்றும் உபயதாரர்கள் தங்க தகடுகளை பூசினர்.

விழாவில் அறநிலையதுறை இணை ஆணையர் தனபால், முன்னாள் சிவகாசி எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன்,செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன், கோவில் ஆய்வாளர் மலையரசுபாண்டியன், நாச்சியார் டிரஸ்ட் ரங்கசாமி, குருசாமிநாயுடு, ஆன்மீகசொற்பொழிவாளர் ராஜாராம், மணியம் ஸ்ரீராமன், சுதர்சனபட்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

இதனை தொடர்ந்து ஜீயர் சுவாமிகள் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago