முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கனிமவள துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

மதுரை,செப்.5 - மதுரை கனிமவள துறை அலுவலகத்தில் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா  ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் மற்றும் விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கிரானைட் அதிபர்கள் பிஆர்பி, பன்னீர்முகமது உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கிரானைட் முறைகேடுகளுக்கு துணை போனதாக டாமின் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலூரில் உள்ள டாமின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

   மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கனிமவள துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார். பின்னர் அங்கிருந்த ஆவணங்களை பார்வையிட்டார். குறிப்பாக கிரானைட் குவாரி ஏலம் விடப்பட்ட விவரம், யார் யார் பெயரில் குவாரிகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கப்பட்ட குவாரிகளுக்கு சரியாக பணம் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். 

      மேலும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணையை மேற்பார்வையிட வருவாய் துறை அலுவலர் அந்தஸ்தில் உள்ள ஜான்லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ள“ர். இவர் நேற்று மதுரை வந்தார். மதுரை அந்த அவர் கனிமவளத்துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வின் போது உடனிருந்து பல ஆவணங்களை பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony