முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் திருட்டு சுரங்கம்: தடுக்காத அதிகாரிகள்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

மதுரை, செப்.5 - தி.மு.க. ஆட்சியில் கண்மாயில் திருட்டு சுரங்கம் தோண்டியதை தடுக்காத கிராம நிர்வாக அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். கிழையூரில் சி.சி. கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் சுமார் ரூ.900 கோடிக்கும் மேல் திருட்டு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இந்த திருட்டு சுரங்கம் பல ஆண்டுகள“க தோண்டப்பட்டு வந்தது. கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரியாமல் எந்த திருட்டு சுரங்கமும் தோண்ட முடியாது. மேலும் திருட்டு சுரங்கம் தோண்டிவிட்டு கடந்த ஜூலை மாதம் இந்த திருட்டு சுரங்கத்தை பி.ஆர்.பி. நிறுவனம் மூடிவந்ததையும் கிராம நிர்வாக அலுவலர் அரசுக்கு மறைத்துவிட்டார். இந்த கிராம நிர்வாக அலுவலர் இன்னும் இதே பதவியில் நீடித்து வருகிறார். இவர்தான் தற்போது பி.ஆர்.பி. நிறுவனம் மீதும் புகார் கொடுத்துள்ளார். திருட்டுக்கு உதவிய இதுபோன்ற அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட அனைவர் மீதும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து சிறைக்கு அனுப்ப வேண்டும்.

மூடப்பட்ட சி.சி.கண்மாய் உட்பட மூடப்பட்ட அனைத்து  திருட்டு கிரானைட் சுரங்கங்களையும் உடன் தோண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony