முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்து கிரானைட் அதிபர் முன்ஜாமீன் மனு தள்ளிவைப்பு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

மதுரை, செப். 6 - சிந்து கிரானைட் அதிபர் பி.கே. செல்வராஜ் முன்ஜாமீன் மனுவை வருகிற 11 ம் தேதிக்கு தள்ளி வைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரைமாவட்டம் மேலூர் பகுதியில் இயங்கி வரும் கிரானைட் குவாரி களில் பல்வேறு முறைகேடு கள் நடந்ததை தொடர்ந்து கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. உட்பட ஏராள மானோர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். போலீசா ரால் தேடப்பட்டு வரும் மு.க. அழகிரி மகனும், ஒலம்பஸ் கிரானைட் இயக் குனருமான துரை தயாநிதி உட்பட கிரானைட் அதிபர்கள் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் துரை தயாநிதி தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையை வருகிற 10 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தர விட்டார். 

இதைத் தொடர்ந்து சிந்து கிரானைட் அதிபர் பி.கே. செல்வராஜ், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசார ணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 11 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்