முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி: அ.தி.மு.க. அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுச்சேரி,ஏப்.- 7 - புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் அது கூட்டணி அரசாக இருக்கும். அந்த அமைச்சரவையில் அ.தி.மு.க.வும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் எங்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் ஜெயலலிதா, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார். அவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் முக்கிய பணியாக இருக்கிறது. ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதில் அ.தி.மு.க.வும் பங்கேற்கும். புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம். 

இப்போது நடைபெறும் வைத்தியலிங்கம் தலைமையிலான ஆட்சி மீது விசாரணை நடத்துவோம். 9 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் இப்போதுள்ள அரசு பதவியில் நீடிக்க உரிமையில்லை. ரங்கசாமி முதல்வராக இருந்த போது சில அமைச்சர்கள் சுயநலத்துடன் செயல்பட்டனர். பல்வேறு துறைகளிலும் ஊழலுக்கு முயன்றனர். அதற்கு ரங்கசாமி துணை போகவில்லை. அதனால்தான் சூழ்ச்சி செய்து அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர் என்றார் அன்பழகன். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்