முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் - ஹர்பஜன் இருவரும் நிரந்தர இடம் பிடிப்பார்கள்

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

விசாகப்பட்டினம், செப். 8 - நியூசிலாந்திற்கு எதிரான டி - 20 தொட ரில் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் சிறப்பாக ஆடி அணியி ல் நிரந்தர இடம் பிடிப்பார்கள் என்று கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட 20 -க்கு 20 போட்டி நடக்க இருக்கிற து. இதன் முதல் போட்டி இன்று விசாக ப்பட்டினத்தில் துவங்குகிறது. 

இந்திய அணியின் அதிரடி வீரரான யுவ ராஜ் சிங் 9 மாத இடைவெளிக்குப் பிற கு மீண்டும் அணிக்கு தேர்வாகி இருக்கிறார். அவர் இடையே புற்று நோயால் பாதிக்கப்பட்டார். 

டர்பனேட்டர் என்று அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் மோசமாக பந்து வீசி வந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும் தேசிய அணியில் இடம் பெற்று இருக்கிறார். 

பஞ்சாப் வீரர்களான இருவரும் பேட்டி ங் மற்றும் பெளலிங்கில் முத்திரை பதி க்கக் கூடியவர்கள். யுவராஜ் சிங் அதிர டியாக ஆடினால் எதிரணி வீரர்களே திகைத்துப் போவார்கள். 

அதே போல ஹர்பஜன் சிங் சுழற் பந்து வீச்சில் மாயா ஜாலம் புரியக் கூடியவ ர் என்பதில் சந்தேகமில்லை. இருவருக் கும் ஆட்டத்தின் போக்கையே மாற்று ம் திறமை உள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மூத்த வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர் பஜன் சிங் இருவரும் அணியில் இடம் பெற்று இருப்பதால் அவர்கள் சாதனை படைக்க ஆவலாக இருக்கிறார்கள் என் றும், அணியில் நிரந்தர இடம் பெறு வார்கள் என்றும் கேப்டன் தோனி தெ ரிவித்தார். 

நியூசிலாந்திற்கு எதிரான டி - 20 போட்டி விசாகப்பட்டினத்தில் துவங்குவதற் கு முன்பாக நிருபர்களைச் சந்தித்த கே ப்ட ன் தோனி மேற்கண்டவாறு கூறி னார். 

மேலும், இந்திய அணியில் நிரந்தர இட ம் பிடிக்க இருவரும் மிகுந்த ஆர்வமா க உள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி. உலகக் கோப்பை துவங்குவதற்கு முன் பாக வீரர்கள் தங்களது திறனை நிரூபி க்க இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும் என்றும் அவர் கூறினார். 

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு வீரர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது சிரமமானது. ஒவ்வொரு வீர ரும் நன்றாக ஆடி அணியில் இடம் பிடி க்க விரும்புகின்றனர். நேர்மறை அணு கு முறையுடன் சிறப்பாகவும், வேட்கையுடனும் ஆடும் வீரரே அணியில் பிரகாசிக்க முடியும் என்றும் தோனி தெரிவித்தார். 

வீரர்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் டி - 20 அணியில் மட்டும்அல்ல, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியிலும் நிரந்தர இடம் பெறலாம். எனவே வீரர்கள் தங்களது திறனை நிரூபிக்க இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். இது ஆரோக்கியமான கிரிக்கெட்டிற்கு ம் நல்லது என்றும் தோனி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago