முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை,செப்.9 - தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று ஐகோர்ட் விழாவில் ஜனாதிபதி பிரணாப் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் 150வது ஆண்டு விழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. காலையில் நடந்த கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் 150​வது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் ஆற்றிய உரை வருமாறு:-​ இந்தியாவின் பழமையான பாரம்பரியமான வரலாற்று சிறப்பு மிக்க நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு மிக்க நீதிபதிகள் பலர் இங்கு பணியாற்றியுள்ளனர்.இந்திய நீதித்துறைக்கு பல ஜாம்பவான்களை கொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். , இந்தியாவின் பழமையான சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றமாக உள்ளது. நீதித்துறையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.  தலைமை நீதிபதிகள் பலர் இங்கு பணியாற்றியுள்ளனர். பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம்.வழங்கியுள்ளது. ஜனநாயகம் செழிக்க சென்னை உயர்நீதிமன்றம். தனது சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதனால் இந்த நீதிமன்றம் நீதித்துறையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. நீதித்துறையின் தீவிர செயல்பாடு அரசியல் சாசன அதிகார பகிர்வை பாதிக்கக் கூடியதாக அமைய கூடாது. நீதிமன்றத்தின் அதிகார பயன்பாட்டிற்கு சுய கட்டுப்பாடும், ஒழுக்கமும் தான் கண்காணிப்பாக அமையும். பாராளுமன்றம் மற்றும் நிர்வாகத்தின் அதிகாரம் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுகிறது. அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு உட்பட்டு நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றின் சமநிலை பாதிக்காதவாறு செயல்பட வேண்டும். காலந்தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். நீதி வழங்குவது விரைவாகவும், அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.  

நாட்டில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஏழைகளுக்கு குறைந்த செலவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஐகோர்ட் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த சட்டத்திட்டம் கொண்டு வரப்படும். அகில இந்திய நீதிப்பணிகள் துறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்