முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிரதமராக முடியாது: சுப்பிரமணிய சுவாமி

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

வதோதரா(குஜராத்), செப். 9 - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்னமும் ஒரு சின்னக் குழந்தையாகவே இருக்கிறார். இந்த நாட்டின் பிரதமராகும் திறமை அவருக்கு கிடையாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

காங்கிரஸ் கட்சி திடீரென்று எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. காரணம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் இருந்து இந்த நாட்டு மக்களை திசை திருப்புவதற்காகவே காங்கிரஸ் இவ்வாறு கொண்டு வர முயற்சி செய்துள்ளது. மக்களின் கவனத்தை நிலக்கரி விவகாரத்தில் இருந்து திசை திருப்பி அரசியல் கட்சிகள் மத்தியில் பிளவையும் ஏற்படுத்த முயன்றது காங்கிரஸ் கட்சி. ஆனால் அந்த முயற்சியில் அக்கட்சி தோற்றுவிட்டது. 

காரணம், அக்கட்சியின் நோக்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். 1995 ம் ஆண்டில் இருந்தே பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிலுவையில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு மசோதாவை இப்போது கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? இந்த விவகாரத்தில் காங்கிரசின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. இக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்னமும் ஒரு சின்னக் குழந்தையாகவே இருக்கிறார். அவரால் இந்த நாட்டின் பிரதமராக முடியாது. அந்த திறமையும் அவருக்கு இல்லை. 

2014 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கும், ராகுலுக்கும் இடையேதான் போட்டி என்கிறார்கள். இவ்வாறு சொல்வதே கேலிக்கூத்தானது. காரணம், நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். தன்னுடைய மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பல அளப்பறிய சாதனைகளை அவர் செய்திருக்கிறார். அவரது சாதனைகளை இந்த நாடும் போற்றுகிறது. ஏன். உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்டவரோடு ராகுலை எப்படி ஒப்பிட முடியும். இப்படி ஒப்பிடுவதே கேலிக்கூத்தான ஒரு விஷயம். இவ்வாறு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்