முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்நீதிமன்ற ஆண்டுவிழா: ஜனாதிபதி வருகை

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.9 - சென்னை உயர்நீதிமன்ற 150-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க நேற்று மதியம் பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ரேசைய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, முப்படை தளபதிகள், தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை செயலாளர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை   அறிமுகப்படுத்திவைத்தார்.  பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற முப்படை அணிவகுப்பை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். 

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காரில் வந்து சேர்ந்தார்.  பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வந்த ஜனாதிபதிக்கு அங்குள்ள தர்பார் ஹாலில்  விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

1862 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் துவக்கப்பட்டது. வரலாற்று பெருமைகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் 150-வது ஆண்டு விழா கடந்த நவம்பர் மாதம் துவங்கியது. அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.  இவ்விழாவில் முதல்வர் ஜெயலலிதா 150-வது ஆண்டின் நினைவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்