முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

திருமலை, செப். - 10 - திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் திருப்பதி செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு சென்ற ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் முழு மரியாதையுடன் அவரை வரவேற்றனர். வேத மந்திரங்கள் முழங்க அவர் மூலஸ்தானத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். கோயிலில் சுமார் அரை மணி நேரம் அவர் இருந்தார். வெங்கடாசலபதியை வழிபட்ட பிறகு ஜனாதிபதி முகர்ஜி உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அப்போது அவருக்கு கோயில் சார்பில் பட்டு வஸ்திரமும், புனித நீரும், லட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. ஜனாதிபதியுடன் ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, திருமலை, திருப்பதி தேவஸ்தான சேர்மன் பாபிராஜூ ஆகியோர் உடன் சென்றனர். ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்