முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடதுசாரிகள், தெலுங்கு தேசத்துடன் நல்லுறவு வைக்கவே சமாஜ்வாடி விருப்பம்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, செப். - 10 - இடதுசாரி கட்சிகள், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளவே சமாஜ்வாடி கட்சி விரும்பும் என்று அக்கட்சித் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.  த்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்து வருகிறது. இதன் பிரதமராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் கட்சிகளில் ஒன்றுதான் சமாஜ்வாடி கட்சி. இந்த கட்சித் தலைவர்களில் ஒருவரான கிரண்மாய் நந்தா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  இடதுசாரிகள், பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் நல்லுறவு வைத்துக் கொள்ள சமாஜ்வாடி கட்சி முயற்சி செய்யும். காங்கிரசையும், பாரதீய ஜனதாவையும் எதிர்க்கும் கட்சிகளுடன் நல்லுறவு வைத்துக் கொள்வோம். மத்திய அரசுக்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவு பிரச்சினைகள் அடிப்படையிலானது. பல்வேறு பிரச்சினைகளில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. குறிப்பாக, பதவி உயர்வு இட ஒதுக்கீட்டு மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் வரும் 12 ம் தேதி கூடுகிறது. அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்போம். குறிப்பாக 2014 ல் வரவிருக்கும் பொதுத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் முலாயம்சிங், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.  மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்திக்கலாம். அதற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். அது சவுகரியத்தை பொறுத்தது என்றும் நந்தா கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்