முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் உள்ள சரப்ஜித்தை விடுவிக்கவேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.- 10 - பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள சரப்ஜித்சிங்கை விடுவிப்பது குறித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் பேசினேன். அதை அவர் கவனமாக கேட்டுக்கொண்டார் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர்  இறந்தனர். இது தொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்து லாகூர் சிறையில் அடைத்தனர். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவர் விவசாயி, அவர் மீது தவறுதலாக வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை விடுவிக்கவேண்டும் என்று தொடர்ந்து கண்ணீருடன் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சரப்ஜித் சிங்கை விடுவிக்க கோரிய கருணை மனு அதிபருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சரப்ஜித் சிங்கை விடுவிக்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உத்தரவிட்டதாக கடந்த ஜூன் மாதம் பரபரப்பான தகவல் வெளியானது. ஆனால் 24 மணி நேரத்திற்குள் சரப்ஜித் சிங் விடுதலை இல்லை என்று பாகிஸ்தான் அரசு மறுப்பு வெளியிட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வேறு ஒரு இந்தியரான சுர்ஜித் சிங் விடுவிக்கப்பட்டார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில் இந்திய- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. முன்னதாக அதிபர் சர்தாரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சரப்ஜித்சிங் விவகாரம் குறித்து சர்தாரியுடன் பேசினேன். அதை அவர் மிகக்கவனமாக கேட்டுக்கொண்டார். மேலும் சரப்ஜித் விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யவும் தன்னுடைய அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். சரப்ஜித் சிங்  விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் பேச்சு வார்த்தை நடந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்