முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் விசர்ஜன விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, செப்.- 10 - விநாயகர் விசர்ஜன விழா தொடர்பாக அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் ஊட்ட்யில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அனைத்து இந்து இமைப்புகள் சார்பில் ஊட்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் ஆன்மிக வழிபாட்டு உரிமை மீட்புக்குழு அமைப்பது, ஊட்டியில் விநாயகர் விசர்ஜன விழா ஊர்வலம் காலம், காலமாக சென்று வந்த பாதையான தேவாங்கர் மண்டபம் தொடங்கி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, புளூமவுண்டர், ஐந்துலாந்தர், மெயின்பஜார், லோயர்பஜார், மார்க்கெட், மணிக்கூண்டு வழியாக ஏ.டி.சி.திடலில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற வேண்டுமென்றும், விசர்ஜன ஊர்வலத்திற்கு மேற்கண்ட பாதையில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அனைத்து இந்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள வேண்டுமெனவும், காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய பொது மக்களும், ஆன்மிக அமைப்புகள், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ இந்து பரிஷத் ஆகியவை சேர்ந்து தடையை மீறி ஊர்வலம் நடத்துவது, இந்த ஊர்வல பாதையை பெற்றுத் தருகின்ற அரசியல் கட்சிக்கு இனி வரும் காலங்களில் ஆதரவு அளிப்பது என அனைத்து இந்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனைத்து இந்து அமைப்பினர் சார்பில் மனுவாக அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்