முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம்விலை ஒரே நாளில் வரலாறு காணாத உயர்வு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். - 10 - ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.528 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 22​ஆக உயர்ந்து நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.23 ஆயிரத்து 216​ஆக இருந்தது. இந்நிலையில் ஒரே வாரத்தில் ரூ.960 உயர்ந்து சனிக்கிழமையன்று பவுன் ரூ. 24 ஆயிரத்து 176​க்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலையில் இதுவரை இல்லாத அளவு ஏற்ற இறக்கம் காணப்பட்டது. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் கடந்த சில வாரங்களாக தங்க விற்பனை அதிகரித்தது. மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலையில் கடும் உயர்வு காணப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வெள்ளி விலையும் கடும் உயர்வு: தங்கத்தின் விலை உயர்ந்ததையடுத்து வெள்ளி விலையும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2 ஆயிரத்து 690 உயர்ந்து சனிக்கிழமை ரூ.64 ஆயிரத்து 505​க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை மார்க்கெட்டில் சனிக்கிழமை விலை நிலவரம்:
ஒரு கிராம் தங்கம் ​ ரூ.3,022
ஒரு பவுன் தங்கம் ​ ரூ.24,176
ஒரு கிலோ கட்டி வெள்ளி ​ ரூ.64,505
ஒரு கிராம் வெள்ளி ​ ரூ.69.00
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்:
ஒரு கிராம் தங்கம் ​ ரூ.2,956
ஒரு பவுன் தங்கம் ​ ரூ.23,648
ஒரு கிலோ கட்டி வெள்ளி ​ ரூ.61,815
ஒரு கிராம் வெள்ளி ​ ரூ.66.10

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்