முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தைச் சேர்ந்த29 தொழிலாளர்கள் சொந்தஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

விருதுநகர், செப். - 10 - விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், முதலிபட்டியில் 05.09.12 அன்று நடைபெற்ற வெடிவிபத்தில் 38 நபர்கள் உயிரிழந்தனர். 55க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்து சிவகாசி, விருதுநகர், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடிவிபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர்; த.ந.ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, 05.09.12 அன்று முதலிபட்டியில் நடைபெற்ற பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவித்தொகையாக தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவித்தொகையாக தலா ரூ.25 வீதம் ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். வெடிவிபத்து நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றிய மேற்குவங்கத்தைச் சேர்ந்த 29 தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேற்குவங்கத்தைச் சேர்ந்த இத்தொழிலாளர்கள் சாத்தூர் இரயில் நிலையத்திலிருந்து இரயில் மூலம் மேற்குவங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தொழிலாளர்களுக்கு தேவையான உணவு வசதிகளை மாவட்ட நிர்வாகமும், டைட்டன் நிறுவனம் மற்றும் இரயில்வே நிர்வாகமும் ஏற்பாடு செய்துள்ளது. தொழிலாளர்கள் திங்கள்கிழமை (10.09.12) அன்று அதிகாலையில் அவர்கள் சொந்த ஊரை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் பாதுகாப்புக்காக இரயில்வே பாதுகாப்பு படையைச் சார்ந்த ஒருவரும் உடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்து சிவகாசி, விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகள் மற்றும் மதுரை அப்பல்லோ மருத்துவமனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது என மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன். தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்