முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் காங்கிரஸ் பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வரம், செப்.- 11 - ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் கடந்த 6 ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது அந்த பேரணியில் பங்கேற்ற காங்கிரசார் மீது ஒடிசா போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு மாநில காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதை அடுத்து ஒடிசா முழுவதும் நேற்று ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த பந்த் போராட்டத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 1500 காங்கிரசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பந்த் போராட்டம் வெற்றி பெற்றதாக மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் கூறினார். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங், முன்னாள் முதல்வர் ஹேமந்த் பிஸ்வால் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் பல ரயில்கள் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் இந்த ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றனர். பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் பஸ்கள், லாரிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடவில்லை. பல இடங்களில் சாலை மறியல்களும் நடத்தப்பட்டன. இந்த பந்த் போராட்டத்தினால் மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்