முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

48இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.- 11 - பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 48 இந்திய மீனவர்களை  அந்நாட்டு அரசு  விடுதலை செய்துள்ளது. பாகிஸ்தான்  நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி இந்திய மீனவர்கள் பலரை  பாகிஸ்தான்  கடற்படையினர்  கைது  செய்து அவர்கள் மீது வழக்கு  தொடர்ந்து  அவர்களை  பாகிஸ்தானில் உள்ள பல சிறைகளில் அடைத்து வைத்திருக்கிறது. இவர்கள் அனைவரும்  விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும்  தண்டனை காலத்தை பூர்த்தி செய்யாத இந்திய மீனவர்களும்  விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் நல்லெண்ண அடிப்படையில்  இவர்கள்  விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும்  பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்திருந்தார். அதன்படி  பாகிஸ்தானின் தென்பகுதியில் உள்ள  துறைமுக நகராணா  கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 48 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வாஹா எல்லை  வழியாக இந்தியாவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ்.எம். கிருஷ்ணாவின் பாகிஸ்தான் பயணத்தை முன்னிட்டு  இந்த நடவடிக்கையை  பாகிஸ்தான் ஜனாதிபதி  எடுத்துள்ளார். விடுதலை செய்யப்பட்டவர்களில் 18 வயது நிரம்பிய இந்திய மீனவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக  பாகிஸ்தான் மீனவர்கள் பலரும்  கைது  செய்யப்பட்டு இந்திய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் இதே போல நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் மீனவர் பேரவை  கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த மாதம் பாராளுமன்றத்தில்  தெரிவிக்கப்பட்ட தகவலின்படி  இந்தியாவில் 85 பாகிஸ்தான் மீனவர்கள் உள்பட மொத்தம் 428 பாகிஸ்தானியர்கள்  இந்திய  சிறைகளில்  வைக்கப்பட்டுள்ளனர் என்று  கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்