முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் விவகாரம்: பொதுமக்களுக்கு பாதிப்பு கூடாது

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

கூடங்குளம் விவகாரம்: பொதுமக்களுக்கு பாதிப்பு கூடாது
சென்னை, செப்.- 11 - கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரை பகுதி மக்கள் lநீண்டநாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் தடையை மீறி போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர். அவர்களை 500 மீட்டர் தூரத்திலேயே போலீசார் தடுத்தனர். இதனால் கடற்கரையிலேயே இரவு முழுவதும் உட்கார்ந்திருந்து போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று காலை 2​வது நாளாக போராட்டக்காரர்கள் அதே இடத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து அங்கு வந்த நெல்லை கலெக்டர் அவர்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினார். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. மேலும், அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் ஏற்காததால் போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். கண்ணீர் புகைக்குண்டு வீசியும், லேசான தடியடி நடத்தியும் அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக டி.ஜி.பி. ராமானுஜத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, கூடங்குளம் நடந்த சம்பவம் குறித்து டி.ஜி.பி.யிடம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago