முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குலசேகரபட்டணம் அருகே மீனவர்கள் மறியல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிசூடு

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

திருச்செந்தூர்,செப்.- 11 - குலசேகரபட்டணம் அருகே மீனவர்கள் நடத்திய மறியலின் போது போலீசாரை தாக்கியதால் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒருவர் பலியானார். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் 2வது நாளாக கடற்கரை பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற தென் மண்டல ஐ.ஜி.ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை தாக்கினர். இதில் ஐ.ஜி.உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போதும் அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்தநிலையில் கூடங்குளம் சம்பவத்தை கண்டித்து திருச்செந்தூர் சுங்க சாவடி அருகே மீனவர்கள் பலர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. மேலும் அவர்கள் போலீசார் மீது கற்களை வீசியும், நாட்டு வெடிகுண்டுகளும் வீசி தாக்கினர். இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து தொடர்ந்து வன்முறை சம்பவத்தில் ்டுபட்டனர். பி;ன்னர் போலீசார் அவர்களை நோக்கி சுட்டனர். இதில் மனப்பாடு ஜேம்ஸ் தெருவைச் சேர்ந்த அந்தோணிஜான் இடது இடுப்ப பகுதியில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை போலீசார் உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அந்தோணிஜான் இறந்தார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்கும் வகையில் கடலோர மீனவ கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago