முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதூர்த்தி பெருவிழா துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

சிவகங்கை செப். - 11 - பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதூர்த்தி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சிவகங்கை மாவட்டம் அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயம் உள்ளது. குன்றக்குடி விநாயக மூகவராக கொண்ட கோவில் இக்கோவிழுக்கு தமிழகமட்டுமின்றி உலகம் முழுவதும் பக்தர்கள் வந்து செல்லும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 19ந் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதூர்த்தி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கற்பகவிநாயகர் கோவில் எதிரே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரிய உர்ச்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கற்பக விநயாகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜைகளை டாக்டர் சிவஸ்ரீ பிச்சை குருக்கள், சோமசுந்தரம் குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் ஆகியோர் நடத்தினர். வருகிற 19ந் தேதி வினாயகர் சதூர்த்தி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் விழாக்கள், நேற்று 10ந்தேதி கொடியேற்றம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, விநாயகர் மூஷிக வாகநத்தில் திருவீதி உலா, 11ந் தேதி வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதி உலா, சிம்ம வாகனத்தில் திருவீதி உலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, 12ந் தேதி பூதவாகனத்தில் திருவீதி உலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, 13ந் தேதி கமலவாகனத்தில் திருவீதி உலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, 14ந் தேதி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, 15ந் தேதி சுவாமி திருவீதி உலா, கஜமுகாசுர சம்ஹாரம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, 16ந் தேதி மயில் வாகனத்தில் திருவீதி உலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, 17ந் தேதி குதிரை வாகனத்தில் திருவீதி உலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, 18ந் தேதி திருத்தேர் வீதி உலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, 19ந் தேதி யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் லெட்சுமணன் செட்டியார், சிதம்பரம் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்