முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.ஆட்சியில் மலைபகுதியில் முறைகேடாக கிரானைட் கற்கள்வெட்டி எடுத்தது கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், செப். - 11 - மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் சுரங்கங்களில் 40 வது நாளாக நேற்று அதிகாரிகள் நடத்திய சோதனையில் தி.மு.க. ஆட்சியில் மூக்காண்டி மலையில் முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் முறை கேடுகளில் ஈடுபட்ட தனியார் கிரானைட் குவாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கற்களை அள விடும் பணியில் அதிகாரிகள் 40 வது நாளாக நேற்று ஈடுபட்டனர். இதில் மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெய்சிங் ஞானதுரை, துணை கலெக்டர் இளங்கோவன், கலால் உதவி ஆணையர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று கீழையூர், கீழவளவு, நாவி னிப்பட்டி ஆகிய பகுதிகளில் தங்களது ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரிகளை வீடியோ எடுப்பதற்காக சென்னை அண்ணா பல் கலைக் கழகத்தில் இருந்து ஆளில்லா சிறிய வகை விமானம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்த அதிகாரிகள் அதில் கிடைத்த தகவலை கொண்டு கீழையூர் சி.சி. கண்மாய், கீழவளவில் பி.ஆர்.பி.க்கு சொந்தமான கிரானைட் கல் இருப்பு வைக்கும் இடம் மற்றும் நாவினிப்பட்டி மூக்காண்டி மலை ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது  மூக்காண்டி மலைப் பகுதியில் முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததும் தெரியவந்தது.  மே லும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆளில்லா சிறிய வகை விமானம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதில் அதிநவீன கருவிகளை பொருத்தி திரும்ப முறை கேட்டில் ஈடுபட்ட குவாரிகளுக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும் போது கிரானைட் குவாரி பகுதிகளில் உள்ள தண்ணீரிலும், தரையிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள கற்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago