முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவரும் ராஜபக்சே மன்மோகன் சிங்கை சந்திக்கிறார்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு,செப்.- 12 - இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, புதுடெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்ததோடு பிழைப்புக்காக கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களையும் தாக்கி வருகிறது. அதோடுமட்டுமல்லாது இலங்கையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்து வருகிறது. அந்த நாட்டிற்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. தமிழர்களுக்கு எதிராக செயல்படும் சிங்கள ராணுவத்தினர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி தர முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் சிங்கள ராணுவத்தினர் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சென்னைக்கு வந்த இலங்கை கிறிஸ்தவ யாத்திரீகர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கை கால்பந்து வீரர்களையும் தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்தவாரம் இலங்கை அதிபர் ராஜபக்சே புதுடெல்லி வருகிறார். அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களை சந்தித்து பேசுகிறார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு வரும் ராஜபக்சே, புத்தமத ஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு டெல்லி சென்று பிரணாப் முகர்ஜியையும் மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. அப்போது தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுவது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதேசமயத்தில் பல புகார்களையும் ராஜபக்சே கூறலாம் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்