முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரிஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தவாரம் வழக்குதொடருகிறார் பிரசாந்த்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 13 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் திட்டமிட்டுள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 1.86 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கடந்த மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் ரகளையில் ஈடுபட்டன. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் வழக்கு தொடர பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் திட்டமிட்டுள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்த ஆவணங்களை தான் திரட்டி வருவதாகவும் இதை வைத்து ஒரு விரிவான புகார் மனுவை தயார் செய்ய இருப்பதாகவும் பூஷன் தெரிவித்தார்.
அனேகமாக அடுத்த வாரம் இது தொடர்பாக தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் சிறப்பு புலனாய்வு குழு மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியும் தான் இந்த மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இருப்பதால் அந்த ஏஜென்சி மூலம் விசாரணை நடத்த கூடாது என்றும் ஒரு சுதந்திரமான ஸ்தாபனத்தின் மூலம் இந்த விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும் தான் கோர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் செல்போன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago