முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவையில் விரைவில்மாற்றம்: சோனியாகாந்தி முடிவு

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, செப். - 13 - மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸை தயார் செய்யும் வகையில், சில மூத்த அமைச்சர்களை கட்சிப் பதவிக்குக் கொண்டு வர சோனியா முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை போக்க நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோக் காந்த் சகாய் ஆகியோரை நீக்கவும் முடிவு செய்துள்ளார். அதே போல சில அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி வெளியேற்றத்துக்குப்பின் அங்கு காங்கிரஸ் தேய்ந்து போய்விட்டது. இதையடுத்து அம் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியை நீக்கி விட்டு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை ஆந்திர முதல்வராக்க சோனியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக மூத்த காங்கிரஸ் தலைவரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்கிறார்கள். இதனால் பெட்ரோலியத்துறைக்கும், வெளியுறவுத்துறைக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம். இந்த அமைச்சரவை மாற்றங்கள் இந்த மாத இறுதியில் செய்யப்படும் என்று தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்