முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல்காந்தியை ஏற்றிச்செல்லாதது சரிதான்: விமானப்படை விளக்கம்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 13 - ராகுல் காந்தியை விமானத்தில் ஏற்றிச்செல்ல மறுத்தது சரிதான் என்று இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது. அசாம் மாநிலத்தில் கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதற்காக அவர் கடந்த பல நாட்களுக்கு அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி நகருக்கு செல்வதற்காக கோக்ரஜ்ஹர் நகர் விமானப்படை விமானநிலையத்திற்கு வந்தார். ஆனால் காலநிலை மோசமாக இருந்தது. வானத்தில் மேகக்கூட்டம் அதிகமாக இருந்ததோடு மழையும் பெய்து கொண்டியிருந்தது. அதனால் கவுகாத்தி நகருக்கு விமானத்தை பாதுகாப்பாக ஓட்டிச்செல்ல முடியாது என்று விமானப்படை விமானத்தின் பைலட் கூறிவிட்டார். இதனால் ராகுல் காந்தி வேறுவழியாக கவுகாத்தி நகருக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது. ராகுல் காந்தியை ஏற்றி செல்ல பைலட் மறுத்தது சரிதான். விமானத்தில் செல்லும் முக்கியப் பிரமுகர்கள் மட்டுமல்லாது அனைத்து பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ராகுல் காந்தி பயணம் செய்ய வந்ததில் இருந்து இதுவரை தொடர்ந்து கனமழை மழை பெய்து கொண்டியிருக்கிறது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அசாம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்களுக்கு சென்று ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். மேலும் போடோ இயக்க பிரதிநிதிகவளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரச்சினைக்கு தீர்வுகாணுவது குறித்த அவர்களது ஆலோசனையை ராகுல் காந்தி கேட்டறிந்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்