முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங் மீதான நெருக்கடி தீர்ந்தது -கேப்டன் தோனி பேட்டி

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, செப். - 13 -  யுவராஜ் சிங் மீதான நெருக்கடி சென் னை போட்டியின் மூலம் தீர்ந்து விட்ட து என்றும், அவர் வழக்கம் போல இனிமேல் சிறப்பாக ஆடுவார் என்று கேப்டன் தோனி தெரிவித்தார்.  இந்திய அணியின் அதிரடி வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் 10 மாத கால இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார்.  பஞ்சாப் வீரரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இத ற்காக அமெரிக்காவில் அவர் சிகிட்சை எடுத்துக் கொண்டார்.  பின்பு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக் கெட் அகாடமியில் அவர் பயிற்சி எடுத் து வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நியூசிலாந்து மற்றும் டி -20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர் வு செய்யப்பட்டார்.  எனவே யுவராஜ் சிங் உடற்தகுதி எப்ப டி இருக்கும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் எப்படி ஆடுவார் என்ற சந் தேகம் அனைவருக்கும் எழுந்தது.  இதற்கு விடை அளிக்கும் வகையில் யுவராஜ் சிங் சென்னையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி -  20 போட்டியில் தனது வழக்கமான அதி ரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  இந்தப் போட்டியில் விராட் கோக்லி 70 ரன் எடுத்தார். அதற்கு அடுத்தபடி யாக யுவராஜ் சிங் 34 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. தவிர, பகுதி நேர சுழற் பந்து வீச்சாளரான அவர் அதிலும் ஜொலித்தார்.  சென்னை போட்டியில் அதிரடி வீர ரான யுவராஜ் சிங்கை ரசிகர்கள் உற்சா  கப்படுத்தினர். அவரது ஆட்டம் கேப்ட ன் தோனிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

இது குறித்து இந்திய அணியின் கேப்ட ன் தோனி அளித்த பேட்டி வருமாறு - யுவராஜ் சிங் 10 மாத இடைவெளிக்குப் பிறகு டி - 20 போட்டியில் ஆடினார். இதனால் அவருக்கு நெருக்கடி இருந்தது. 

சென்னை போட்டியில் அவர் நன்றாக ஆடினார். இதனால் அவர் மீதான நெரு க்கடி தீர்ந்து விட்டது. இனிமேல் அவர் வழக்கம் போல தொடர்ந்து சிறப்பாக ஆடுவார். 

யுவராஜ் சிங்கிற்கு சென்னை போட்டி முக்கியமான போட்டியாகும். அனைவரின் கண்களும் அவர் மீதே இருந்தன. அவரை களத்தில் பார்த்தது எனக்கு சந் தோசத்தை அலித்தது. அவர் பேட்டிங் தவிர, பந்து வீச்சிலும் கலக்கினார் என் றும் தோனி கூறினார். 

இந்திய அணியில் 4 ஸ்பெசலிஸ்ட் பெளலர்கள் இடம் பெற்று இருந்தனர். 5 -  வது பகுதி நேர பெளலரவாக யுவியை  நான் பயன்படுத்தினேன். பெளலிங்கி ல் அவர் நன்கு முன்னேறி இருககிறார் என்றும் தோனி தெரிவித்தார். 

மேலும், யுவராஜ் சிங் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அவர் மீண்டும் களத் தில் இறங்கியது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதே போல அவர் உல கக் கோப்பையிலும் ஆடுவரார் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் தோனி தெரிவித்தார். 

தவிர, சென்னை போட்டியில் சிறப்பா க பேட்டிங் செய்த, விராட் கோக்லி, யுவராஜ் சிங் மற்றும் சிறப்பாக பந்து வீசிய பாலாஜி ஆகியோருக்கும் தோ னி பாராட்டு தெரிவித்தார். 

சென்னையில் நடைபெற்ற 2-வது டி - 20 போட்டியில் இந்திய அணி பரபரப் பான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தி ல் தோல்வி அடைந்தது. 

-------------------------- 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்