முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5,000 ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ்: ஏர்-இந்தியா திட்டம்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 14 - பெரும் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா தனது 27,000 ஊழியர்களில் 5,000 பேரை விருப்ப ஓய்வில் அனுப்ப மத்திய அரசிடம் ரூ. 1,100 கோடியை கோரியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு விமானங்கள் வாங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த ஆண்டு ரூ. 10,600 கோடியை மத்திய அரசு வழங்கவுள்ளது. இத்துடன் சேர்த்து வி.ஆர்.எஸ்சுக்காக மேலும் ரூ. 1,100 கோடி கோரியுள்ளது ஏர் இந்தியா. தனது ஊழியர்களில் 5,000 பேரையாவது விருப்ப ஓய்வில் அனுப்ப ஏர் இந்தியா விரும்புகிறது.

ஆனால், விஆர்எஸ்சில் ஓய்வு பெறுவோருக்கு அதிக பணம் தந்தால் தான் நிறைய பேர் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற முன் வருவர் என்று கூறும் ஏர் இந்தியா, அதற்காகவே கூடுதல் நிதியைக் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு பணம் தந்தாலும் 5,000 பேர் விருப்ப ஓய்வில் வேலையைவிட்டு போக சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தோர் அல்லது 40 வயதுக்கு மேலானோரை குறி வைத்து இந்த விஆர்எஸ் திட்டத்தை அமலாக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் விமான நிறுவனங்களில் ஒரு விமானத்துக்கு 110 முதல் 150 ஊழியர்கள் என்ற விகிதமே உள்ளது. ஆனால், ஏர் இந்தியாவில் இந்த விகிதம் 280 ஊழியர்கள் என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்