முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புமணி வழக்கில் அக்டோபர் 30-ம் தேதி முதல் விசாரணை

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 14​ - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் 9 பேருக்கு எதிராக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 30-ந் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த முறைகேடு வழக்கு நீதிபதி தல்வந்த்சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அன்புமணி ராமதாஸ், முன்னாள் சுகாதாரத் துறைத் துணைச் செயலர் கே.வி.எஸ். ராவ், அமைச்சத்தின் செக்ஷன் அதிகாரி சுதர்சன் குமார், டெல்லி சடிப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ். தூபியா, டி.கே. குப்தா, இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரித் தலைவர் சுரேஷ் பதோரியா, முன்னாள் டீன் எஸ்.கே. டோங்கியா, இயக்குநர் கே.வி. சக்சேனா, நிர்வாகிகள் நிதின் கோத்வால், பவன் பம்பானி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

குற்றம்சாட்டப்பட்டோருக்கு, சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல்கள் கிடைத்ததை அவர்களின் வழக்கறிஞர்கள் மூலம் நீதிபதி உறுதிப்படுத்திக் கொண்டார். இந்த வழக்கின் வாதங்களைத் தனித்தனியாகத் தொடர தேதி ஒதுக்கும்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியை கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை நிராகரித்த நீதிபதி தல்வந்த் சிங், அக்டோபர் மாதம்  30 ம் தேதி முதல் அனைத்து நீதிமன்ற வேலை நாள்களிலும் இந்த வழக்கு விசாரணை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்