முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர்கள் கட்டுப்பாடுடன் எழுத பிரதமர் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கொச்சி,செப்.14 - பத்திரிகையாளர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய வகையில் இல்லாமலும் கட்டுப்பாடுடனும் செய்திகளை எழுத வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார். கேரள மாநில வர்த்தக நகரமான கொச்சியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்க 50-வது ஆண்டு விழாவில் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது:-

பத்திரிகையாளர்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் இல்லாமலும் மிகவும் கட்டுப்பாடனும் செய்திகளை எழுத வேண்டும். பத்திரிகைளில் வெளிவரும் செய்திகள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் செய்திகள் சமுதாயத்திலோ அல்லது நாட்டிலோ பிளவை ஏற்படுத்தும் வகையில் இல்லாமல் சமுதாய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணிக்காத்து வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவதில் பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகள் நியாயமாகவும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். நாடு தற்போது ஒரு இக்கட்டான காலக்கட்டத்தை கடந்து கொண்டியிருக்கிறது. கடந்த பல மாதங்களாக நாட்டில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நமது சமுதாய மக்களிடத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் நடந்த கலவரமும் அதனால் டெல்லி, மும்பை, பெங்களூர்,சென்னை, ஐதராபாத் புனே மற்றும் இதர பகுதிகளில் வசித்த வடகிழக்கு மாநில மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பிய சம்பவம் வேதனை அளிக்கிறது. மேலும் சமுதாய அமைதியையும் நல்லிணக்கத்தையும் காப்பாற்ற நாம் போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதையும் காட்டுகிறது. நாம் அனைவரும் கண்காணிப்புடன் இருந்து வகுப்பு ஒற்றுமையை பாதுகாக்க கடினமாக உழைக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்திற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் இந்திய அரசியல் சட்டத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்களை வெளியிடும் ஒரு அமைப்பாக பத்திரிகைகள் இருக்கின்றன. இந்தியாவில் பல்வேறு இனத்தை சேர்ந்தவர்களும்,பல்வேறு மொழியும் கலாசாரமும் உடையவர்களாக இருக்கிறார்கள். கேரளாவில் மக்களின் விருப்பங்களை பத்திரிகைகள் செய்திகளாக வெளியிடுகின்றன. மலையாள பத்திரிகைகள் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றன. மலையாளம் மனோரமா, மாத்ருபூமி, தீபிகா,கேரள கமுடி ஆகியவைகள் சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டவைகள். இவைகள் 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்