முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகமான வளர்ச்சிக்கு துணிச்சலான நடவடிக்கைகள் தேவை

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 16 - நாட்டின் அதிக வளர்ச்சிக்கு துணிச்சலான நடவடிக்கைகள் தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பொருளாதார வளர்ச்சி என்று கூறிக்கொண்டு கடந்த பல தினங்களாக மத்திய அரசானது கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் டீசல் விலை உயர்வு, அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி என்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று 12-வது ஐந்தாண்டு திட்டம் தொடர்பாக திட்டக்கமிஷனின் முழுக்கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் அதிக வளர்ச்சி ஏற்பட துணிச்சலான நடவடிக்கைகள் தேவை என்றார். டீசல் விலை உயர்த்தப்பட்டதும், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதும் சரிதான் என்றார். எரிசக்தி விலை உலகின் இதர நாடுகளில் இருப்பதோடு ஒப்பிட்டால் நமது நாட்டில் மிகவும் குறைவுதான். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உள்கட்டமைப்பு துறையில் முதலீடு தேவையாக இருக்கிறது. இதற்கு நாம் தயாராக வேண்டும். கடும் பொருளாதார நடவடிக்கைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறினார். 12-வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையை அங்கீகரிப்பதற்காக இந்த கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago