முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல்விலை உயர்வை திரும்பப்பெற மத்தியஅரசுக்கு மம்தாகெடு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,செப். - 16 - அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 72 மணிநேர கெடு விதித்திருக்கிறது. பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இம்முடிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கெடு விதித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறியுள்ளதாவது, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. அக் கூட்டத்தில் பல்பொருள் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சில்லரை வணிகம், ஆயுள் காப்பீடு, விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இந்த முடிவுகளை 72 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 18 ம் தேதியன்று நடைபெறும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago