முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சன் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர், செப். - 16 - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் (வயது 81) நேற்று மாரடைப்பால் காலமானார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சுதர்சன் நேற்று காலை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்த போது காலை 7 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழாந்தார். சுதர்சனின் உடல் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டு இன்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் குப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர் சுதர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்