முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலையை உயர்த்தியது சரிதானாம் மன்மோகன்சிங் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 16 - டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 அதிகரித்தது சரியான நடவடிக்கைதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கும் வந்தது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளே கூட கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விலை உயர்வுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். டீசல் விலையை உயர்த்தியது சரியான நேரத்தில் சரியான திசையில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்றும் என்று மன்மோகன் சிங் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார். இந்த நடவடிக்கையின் மூலம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவிலிருந்து மீளும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
எரி சக்தி கொள்கையில் எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கை இது என்றும் அவர் கூறியுள்ளார்.
எரிசக்தி துறை ஒரு சிக்கலான துறையாக இருக்கிறது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எரி பொருள் பற்றாக்குறையை சமாளிக்க நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது அதிகரித்து கொண்டே போகிறது. எரிசக்தி பாதுகாப்பை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் நமது எரிபொருள் விலைகள் கையை விட்டு போய் விட்டன. அதனால்தான் டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்